வெளியீட்டு உரிமை
நடிகர் விஜய் நடிப்பில், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வாரிசு’. இதில் நடிகை ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்க, பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்க, தயாரிப்பாளர் தில்ராஜு தயாரிக்கிறார். இப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் வெளியீட்டு உரிமையை செவன் ஸ்கீரின் ஸ்டுடியோஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இதனிடையே வாரிசு படத்திற்கு அதிக திரையரங்குகளை ஒதுக்குவது குறித்து உதயநிதியை சந்தித்து பேசவுள்ளதாக தெரிவித்தார்.
இந்நிலையில், தமிழகத்தில் சென்னை,செங்கல்பட்டு, கோயம்புத்தூர், நார்த் ஆர்காடு, சவுத் ஆர்காடு ஆகிய பகுதிகளின் வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது.