சினிமாவெள்ளித்திரை

விஜய் ஆண்டனி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ரிலீஸ் தேதி

தமிழ் திரையுலகின் பிரபல இசையமைப்பாளரான விஜய் ஆண்டனி 2012-ம் ஆண்டு வெளியான ‘நான்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இவர் கைவசம் தற்போது அக்னி சிறகுகள், தமிழரசன், கொலை, வள்ளி மயில், பிச்சைக்காரன் 2, மழை பிடிக்காத மனிதன் ஆகிய படங்கள் உள்ளது. அதன்படி விஜய் ஆண்டனி நடித்துள்ள ‘தமிழரசன்’ திரைப்படத்தை இயக்குனர் பாபு யோகிஸ்வரன் இயக்கியுள்ளார். மேலும், நடிகை ரம்யா நம்பீசன், சுரேஷ் கோபி, சோனு சூட், யோகி பாபு, சங்கீதா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இத்திரைப்படத்தின் ட்ரைலர் அண்மையில் வெளியாகி கவனம் ஈர்த்தது. இந்நிலையில், ‘தமிழரசன்’ படம் வருகிற 30-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Related posts