சமூகம் - வாழ்க்கைசினிமாவெள்ளித்திரை

கவனம் ஈர்க்கும் மைக்கல் பட டிரைலர்!

டிரைலர் ரிலீஸ்

‘புரியாத புதிர்’, இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படங்களின் மூலம் பிரபலமானவர் இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி. இவர் தற்போது சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ள ‘மைக்கேல்’ இயக்கியுள்ளார். இதில் விஜய் சேதுபதி, கௌதம் மேனன், திவ்யன்ஷா கௌசிக், வரலட்சுமி சரத்குமார், வருண் சந்தேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், சாம் சி. எஸ். இசையமைக்க, ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி மற்றும் கரண் சி புரொடக்சன்ஸ் எல்எல்பி நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வருகிற பிப்ரவரி 3-ம் தேதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில், ‘மைக்கேல்’ படத்தின் டிரைலர் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்து வருகிறது.

Related posts