சமூகம்சினிமாமருத்துவம்

பிரபல குணச்சித்திர நடிகர் ஈ.ராமதாஸ் திடீர் மரணம்!

திடீர் மரணம்

தமிழ் திரையுலகில் எழுத்தாளரும், இயக்குனருமான ஈ.ராமதாஸ், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ், குக்கூ, நாடோடிகள், காக்கி சட்டை, விசாரணை, தர்மதுரை, விக்ரம் வேதா, மாரி உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்த இவர் மாரடைப்பு காரணமாக நேற்று இரவு மரணமடைந்தார். இந்நிலையில், கே.கே.நகர் முனுசாமி சாலையில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவர் உடல் வைக்கப்பட்டுள்ளது.

மேலும், நெசப்பாக்கம் மின் மயானத்தில் இன்று மாலை 5 மணிக்கு ஈ.ராமதாஸின் உடல் தகனம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

Related posts