சமூகம்சினிமா

விஜயுடன் இணையும் பிரபல நடிகர்!

பிரபல நடிகர்

வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில், விஜய் நடிப்பில் கடந்த 11-ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் வாரிசு. இதனையடுத்து விஜய்யின் 67-வது படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குவதாகவும், இதன் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியதாக தகவல்கள் வெளியானது. மேலும், இப்படத்தில் நடிகர் விஜய் தாதா கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் இதனை படக்குழு உறுதி படுத்தவில்லை.

இந்நிலையில், விஜய் 67 படத்தில் நடிகர் ஃபகத் பாசில் நடிக்க வாய்ப்புள்ளதாக அவர் தற்போது தெரிவித்துள்ளார்.

Related posts