சினிமாவெள்ளித்திரை

நடிகர் பரத் தவறவிட்ட சூப்பர்ஹிட் வாய்ப்பு!

சூப்பர்ஹிட் வாய்ப்பு

கடந்த 2003-ம் ஆண்டு வெளியான பாய்ஸ் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானவர் பரத் இப்படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்கியிருந்தார். அதனையடுத்து செல்லமே, காதல், எம் மகன், வெயில் உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்களிடையே கவனம் ஈர்த்தார். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான மிரல் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

இந்நிலையில், இயக்குனர் பூபதி பாண்டியன் இயக்கத்தில், கடந்த 2006-ம் ஆண்டு வெளியான திருவிளையாடல் ஆரம்பம் படத்தின் கதை முதலில் நடிகர் பரத்துக்கு தான் சொல்லப்பட்டுள்ளது. அவர் மறுத்துவிடவே பின்னர் அதில் தனுஷ் நடித்ததாக கூறப்படுகிறது.

Related posts