புதிய பாடல்
ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் இயக்குனர் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கனெக்ட்’. இதில் நடிகை நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும், சத்யராஜ், அனுபம் கெர், வினய் ராய் ஹனியா நஃபிஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ‘மாயா’ படத்தை இயக்கிய அஸ்வின் சரவணன் இப்படத்தை இயக்கியுள்ளார்.
இந்நிலையில், ‘கனெக்ட் படத்தின் ‘நான் வரைகிற வானம்’ என்ற புதிய பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

