அவதார் -2
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில், சுமார் ரூ.2 ஆயிரம் கோடி செலவில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’. இப்படம் உலகம் முழுவதும் சுமார் 52 ஆயிரம் திரையரங்குகளில் நேற்று வெளியானது. தமிழகத்தில் அதிக திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் வினியோகஸ்தர்கள் தரப்பில் ஏற்பட்ட பிரச்சனையால் தமிழ்நாட்டில் பல முக்கிய திரையரங்குகளில் அவதார் -2 வெளியாகவில்லை.
இந்நிலையில், ‘அவதார்-2: தி வே ஆஃப் வாட்டர்’ திரைப்படம் வெளியாவதற்கு முன்பே சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியாகியுள்ளது. இதனால் படத்தின் வசூல் பாதிக்கப்படும் என்ற அச்சம் படக்குழுவினர் மத்தியில் எழுந்துள்ளது.