ரிலீஸ் தேதி
பிரபல ஹிந்தி நடிகை சன்னி லியோன் தமிழில் நடித்துள்ள திரைப்படம் ‘ஓ மை கோஸ்ட்’. வரலாற்று பின்னணி பேய் படமாக உருவாகியுள்ள இப்படத்தை ‘சிந்தனை செய்’ படத்தை இயக்கிய யுவன் இயக்கியுள்ளார். இதில் நகைச்சுவை நடிகர் சதீஷ், யோகி பாபு, ரமேஷ் திலக், தர்ஷா குப்தா, சஞ்சனா, தங்கதுரை, ஜி.பி. முத்து ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜாவேத் ரியாஸ் இசையமைக்க, வாவ் மீடியா என்டர்டெயின்மென்ட் மற்றும் ஒயிட் ஹார்ஸ் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது. அண்மையில் வெளியான இப்படத்தின் ட்ரைலர் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், ‘ஓ மை கோஸ்ட்’ படம் வருகிற 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
And this New Year going to be a Bang on 💥 Celebrations with Thalaivi’s @SunnyLeone #ohmyghost in theatres from Dec30!#OMGFromDec30 @actorsathish @iYogiBabu
@DharshaGupta @thilak_ramesh @thangadurai123 @yuvan_dir @javeddriaz @dharankumar_c @DoneChannel1 @vonimusic pic.twitter.com/PAw1TY86At— VAU Media Entertainment (@VAU_Media) December 16, 2022

