சமூகம் - வாழ்க்கைசினிமா

பிரபல இயக்குனர் ரகசிய திருமணம்!

ரகசிய திருமணம்

சித்தார்த் நடிப்பில், கடந்த 2012ம் ஆண்டு வெளியான ‘காதலில் சொதப்புவது எப்படி’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பாலாஜி மோகன். அதனைத்தொடர்ந்து துல்கர் சல்மான் நடித்த ‘வாயை மூடி பேசவும்’ திரைப்படத்தை இயக்கினார். அதனையடுத்து கடந்த 2015-ம் ஆண்டு நடிகர் தனுஷை வைத்து ‘மாரி’ படத்தை இயக்கினார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகத்தை இயக்கினார். இந்நிலையில், இயக்குனர் பாலாஜி மோகன், பிரபல துணை நடிகர் தன்யா பாலகிருஷ்ணனை ரகசிய திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

இவர் ‘காதலில் சொதப்புவது எப்படி’, ‘நீதானே என் பொன்வசந்தம்’, ‘ராஜா ராணி’ போன்ற பல படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts