அவதார்-2
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில், அதிக பொருட்செலவில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’. இப்படம் உலகம் முழுவதும் சுமார் 160 மொழிகளில், 52 ஆயிரம் திரையரங்குகளில் இன்று வெளியாகியுள்ளது. இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது. இதனிடையே நடிகர் தனுஷ் தனது மகன்கள் லிங்கா மற்றும் யாத்ரா ஆகியோருடன் அவதார்-2 படத்தை திரையரங்கில் பார்த்து ரசித்தார்.
இந்நிலையில், நடிகர் பிரகாஷ் ராஜும் தனது மகனுடன் ‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ படத்தை ஐ – மாக்ஸ் திரையரங்கில் பார்த்து ரசித்துள்ளார்.
Family time #Avatar watching with our son…. Wowwwwwe. What an experience pic.twitter.com/7pKioe3AuJ
— Prakash Raj (@prakashraaj) December 16, 2022

