சினிமாவெள்ளித்திரை

அஜித்தை விட விஜய் தான் பெரிய நடிகர் – தில் ராஜூ சர்ச்சை பேச்சு!

விஜய் படம்

தளபதி விஜய் நடிப்பில் தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகி வரும் திரைப்படம் ‘வாரிசு’. இதில் ராஷ்மிகா மந்தனா கதயநாயகியாக நடிக்க, பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய காதபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை வம்ஷி பைடிபள்ளி இயக்க, தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரித்துள்ளார். மேலும், இப்படத்தின் வெளியீட்டு உரிமையை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் பெற்றுள்ளது.

அஜித் படம்

அதேபோல் அஜித் – ஹெச் வினோத் கூட்டணியில் உருவாகியுள்ள துணிவு படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் பெற்றுள்ளது. இந்த இரண்டு படங்களும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் அறிவிக்கப்பட்டுள்ளது. 8 ஆண்டுகளுக்கு பிறகு விஜய், அஜித் படம் ஒரே நாளில் வெளியாவதால் ரசிகர்களிடயே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இரண்டு படங்களுக்கும் திரையரங்குகள் சரி சமமாக ஒதுக்கப்படும் என கூறப்பட்டது.

சர்ச்சை பேச்சு

இந்நிலையில், அண்மையில் பேட்டி ஒன்றில் பேசிய தயாரிப்பாளர் தில் ராஜூ, ‘தமிழ்நாட்டில் அஜித்தை விட விஜய் பெரிய நடிகர் என்பதால் ‘வாரிசு’ படத்திற்கு கூடுதல் திரைகள் ஒதுக்கப்பட வேண்டும்’ என கூறியுள்ளார். மேலும், இது குறித்து உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பேசவுள்ளதாகவும் கூறியுள்ளார்.

தயாரிப்பாளர் தில் ராஜூவின் இந்த பேச்சு அஜித் ரசிகர்களிடயே கொந்தளிப்பை ஏற்படிதியுள்ளது.

Related posts