சமூகம் - வாழ்க்கைசினிமா

வாரிசுக்கு தயாராகும் அட்லீ – பிரியா தம்பதி!

பிரபல இயக்குனர்

2013-ம் ஆண்டு வெளியான ராஜா ராணி படத்தின் மூலம் பிரபலமானவர் இயக்குனர் அட்லீ. அதனையடுத்து விஜய் நடிப்பில், தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்து மூன்று படங்களை இயக்கினார். இவர் தற்போது ஹிந்தியில் ஷாருக்கான் நடிக்கும் ஜவான் படத்தை இயக்கி வருகிறார். இத்திரைப்படம் அடுத்த ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கடந்த 2014-ம் ஆண்டு இயக்குனர் அட்லீ, பிரியாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில், பிரியா கர்ப்பமாக இருப்பதாக அட்லீ தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related posts