சினிமாவெள்ளித்திரை

கவனம் ஈர்க்கும் செம்பி பட இரண்டாவது டிரைலர்!

இரண்டாவது டிரைலர்

மைனா படத்தின் மூலம் தமிழில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் பிரபு சாலமன். அதனைத்தொடர்ந்து கும்கி, கயல், தொடரி போன்ற படங்களை இயக்கி பிரபலமானார். தற்போது இவர் இயக்கத்தில் ‘செம்பி’ என்ற படம் உருவாகியுள்ளது. இதில் கோவை சரளா, அஸ்வின் குமார், ரேயா, தம்பி ராமையா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் மற்றும் ஏஆர் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்துள்ளது. இத்திரைப்படத்தின் முதல் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், ‘செம்பி’ படத்தின் இரண்டாவது டிரைலர் இன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Related posts