இந்தியன்-2
கமல்ஹாசன் நடிப்பில், 1996-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘இந்தியன்’. இப்படத்தை பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கியிருந்தார். இத்திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதனையடுத்து 25 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதில் கமல்ஹாசன், காஜல் அகர்வால், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், சித்தார்த், பாபி சிம்கா, சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். மேலும், லைகா புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்து வருகிறது.
டவிட்டர் பதிவு
இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தியன்-2 படப்பிடிப்பு தளத்தில் நேதாஜி சிலையின் கீழே நிற்கும் புகைப்படத்தை பதிவிட்டு, ’25 ஆண்டுகளுக்கு முன்பு கலைஞரால் மாவீரர் நேதாஜிக்கு சிலை திறக்கப்பட்ட அதே நாளில் அந்தச் சிலையின் கீழே இந்தியன்-2 படப்பிடிப்பிற்காக நிற்கிறேன். மகத்தான மனிதர்கள், மகத்தான நினைவுகள்’ என குறிப்பிட்டுள்ளார்.
25 ஆண்டுகளுக்கு முன்னர் கலைஞரால் மாவீரர் நேதாஜிக்கு சிலை திறக்கப்பட்ட அதே நாளில் அந்தச் சிலையின் கீழே இந்தியன்-2 படப்பிடிப்பிற்காக நிற்கிறேன். மகத்தான மனிதர்கள், மகத்தான நினைவுகள். pic.twitter.com/tLbjpw2MjE
— Kamal Haasan (@ikamalhaasan) December 15, 2022