அரசியல்சமூகம்தமிழ்நாடு

திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!

திமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை நடைபெற்று முடிந்தது.

திமுக

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் இன்று காலை நடைபெற்றது. இது புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டதற்கு பிறகு திமுகவின் முதல் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் 2024ம் ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தல் பணிகள் குறித்தும், பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு பிறந்தநாள் நிறைவு விழா கொண்டாட்டம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Related posts