சமூகம்சினிமா

எனக்கு பரிசு எதுவும் இல்லை – வெங்கட் பிரபு வருத்தம்!

டவிட்டர் பதிவு 

நடிகர் நாக சைதன்யா நடிப்பில், இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘கஸ்டடி’. இதில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்க, சரத்குமார், வென்னேலா கிஷோர், பிரேம்ஜி, சம்பத் ராஜ், பிரியாமணி மற்றும் பிரேமி விஷ்வநாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்ரீநிவாஸா சித்தூரி தயாரிக்கும் இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, நடிகர் பிரேம்ஜிக்கு மொபைல் போனை பரிசளித்துள்ளார். இதனை பிரேம்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதற்கு இயக்குனர் வெங்கட் பிரபு, ‘அப்போ எனக்கு எதுவும் பரிசு இல்லை’ என வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

Related posts