ரிலீஸ் தேதி
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிரஞ்சீவி. இவரின் 154-வது திரைப்படம் இயக்குனர் கே.எஸ்.ரவீந்திரா இயக்கத்தில் உருவாகி வருகிறது. ‘வால்டேர் வீரய்யா’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய்.ரவி சங்கர் ஆகியோர் தயாரித்துள்ளனர். இதில் நடிகை ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இந்நிலையில், ‘வால்டேர் வீரய்யா’ படம் வருகிற ஜனவரி 13-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
సంక్రాంతి కి కలుద్దాం 🔥🎯@RaviTeja_offl @dirbobby @shrutihaasan @CatherineTresa1 @ThisIsDSP @konavenkat99 @MythriOfficial @SonyMusicSouth pic.twitter.com/dLBKLphlZk
— Chiranjeevi Konidela (@KChiruTweets) December 7, 2022

