பிரபல நடிகர்
1998ம் ஆண்டு வெளியான ‘பூந்தோட்டம்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமானவர் சிவநாராயண மூர்த்தி. தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்துள்ள பொன்னவராயன் கோட்டையை பூர்விகமாக கொண்ட இவர் விவேக் மற்றும் வடிவேலுடன் இணைந்து பல நகைச்சுவை காட்சிகளில் நடித்துள்ளார். மேலும், ரஜினி, அஜித், விஜய் போன்ற முன்னணி நடிகர்களுடன் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், சமீபகாலமாக தனது சொந்த ஊரில் வசித்து வந்த இவர் உடல்நலக் குறைவு காரணமாக நேற்றிரவு 8.30 மணியளவில் காலமானார்.
சிவ நாராயணமூர்த்தியின் இறுதிச்சடங்கு இன்று மதியம் 02.00 மணிக்கு நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.