துணிவு பாடல்
இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில், நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘துணிவு’. இப்படத்தை போனி கபூர் தயாரிக்க, மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உள்ளிட்டோர் முக்கிய காதபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே ஜிப்ரான் இசையமைக்கும் இப்படத்தின் ‘சில்லா சில்லா’ எனும் முதல் பாடல் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ‘சில்லா சில்லா’ பாடல் திருட்டுத்தனமாக இணையதளத்தில் கசிந்துள்ளது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.