சினிமாவெள்ளித்திரை

ஹிப் ஹாப் ஆதியின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு!

புதிய படம்

தமிழில் பிரபல ராப் பாடகராக இருப்பவர் ஹிப்ஹாப் ஆதி. இவர் ஆம்பள, தனி ஒருவன், அரண்மனை-2, கதகளி, கத்தி சண்டை, இமைக்கா நொடிகள், கோமாளி உள்ளிட்ட படங்களில் இசையமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். மேலும், மீசையை முறுக்கு, நட்பே துணை, நான் சிரித்தால், அன்பறிவு போன்ற படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். இந்நிலையில், ஹிப்ஹாப் ஆதி நடிக்கும் புதிய படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது.

நெஞ்சமுண்டு நேர்மையுண்டு படத்தை இயக்கிய கார்த்திக் வேணுகோபாலன் இப்படத்தை இயக்குகிறார். இந்த படத்தின் அறிவிப்பு வீடியோவைப் படக்குழு வெளியிட்டுள்ளது.

Related posts