சிறப்பு பேருந்து
கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பக்தர்கள் நாட்டின் பல பகுதிகளில் இருந்து வந்து தரிசனம் செய்வது வழக்கம். கார்த்திகை மாதம் 1-ம் தேதி முதல் 60 நாட்களுக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். இதனிடையே இந்த ஆண்டு நாளை மறுநாள் கார்த்திகை 1-ந் தேதி பிறப்பதையொட்டி மண்டல பூஜை தொடங்கவுள்ளது. இதற்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. இதற்கான ஆன்லைன் முன்பதிவு ஏற்கனவே தொடங்கிவிட்டது.
இந்நிலையில், முதல்கட்டமாக தமிழகத்தில் இருந்து 300-க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக கேரள போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.