சமூகம்தமிழ்நாடு

இந்திய டேக்வாண்டோ கூட்டமைப்பு தேர்தலில் ஐசரி கணேஷ் அமோக வெற்றி!

பிரபல தயாரிப்பாளர்

தமிழ் திரையுலகில் பிரபல தயாரிப்பாளராக இருப்பவர் ஐசரி கணேஷ். இவர் தனது வேல்ஸ் இன்டர்நேஷ்னல் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பல வெற்றி திரைப்படங்களை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. ‘கோமாளி’, ‘எல்கேஜி’, ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’, ‘மூக்குத்தி அம்மன்’, ‘வெந்து தணிந்தது காடு’ போன்ற பல வெற்றி படங்களை தயாரித்துள்ளது. மேலும், ஐசரி கணேஷ் வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தராகவும், தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க தலைவராகவும் இருக்கிறார்.

தேர்தலில் வெற்றி 

இந்நிலையில், ஐசரி கணேஷ் இந்திய டேக்வாண்டோ கூட்டமைப்பிற்கான தேர்தலில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட குஜராத் மாநிலத்தை சேர்ந்த சஞ்சய் சுப்பிரியா அவர்களுக்கு ஆதரவாக 15 மாநிலங்கள் வாக்களித்துள்ளது. அதேபோல் ஐசரி கணேஷ் அவர்களுக்கு ஆதரவாக 20 மாநிலங்கள் வாக்களித்துள்ளது.

Related posts