சினிமாவெள்ளித்திரை

சிவகார்த்திகேயன் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ஓடிடி ரிலீஸ்

சிவகார்த்திகேயன் நடிப்பில், தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ப்ரின்ஸ்’. மரியா ரியாபோஷப்கா கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தில் சத்யராஜ், பிரேம்ஜி அமரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தமன் இசையமைக்க, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் கடந்த அக்டோபர் 21-ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.

இந்நிலையில், ப்ரின்ஸ் திரைப்படம் வருகிற 25ம் தேதி டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts