சினிமாவெள்ளித்திரை

வெங்கட் பிரபு படத்தில் இணைந்த பிரபல நடிகர்!

பிரபல நடிகர்

நடிகர் நாக சைதன்யா தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வரும் புதிய படத்தில் நடித்து வருகிறார். தற்காலிகமாக ‘என்சி22’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், சரத்குமார், வென்னேலா கிஷோர், பிரேம்ஜி, சம்பத் ராஜ், பிரியாமணி மற்றும் பிரேமி விஷ்வநாத் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்ரீநிவாஸா சித்தூரி தயாரிக்கும் இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ளது. இப்படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்து இசையமைக்கின்றனர்.

இந்நிலையில், என்சி22 படம் தற்போது ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக செட் அமைக்கப்பட்டு படமாக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் நடிகர் அரவிந்த் சுவாமி இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.

Related posts