வாரிசு படம்
விஜய் நடிப்பில், இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘வாரிசு’. இப்படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்க, பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தில்ராஜு தயாரிக்கும் இப்படத்தை ஆந்திரா, தெலுங்கானாவில் அதிக திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டது.
புதிய சிக்கல்
இந்நிலையில், ஐதராபாத்தில் நடைபெற்ற தெலுங்கு தயாரிப்பாளர் சங்க கூட்டத்தில் பொங்கல் பண்டிகைக்கு நேரடி தெலுங்கு படங்களுக்கு மட்டுமே அதிக திரையரங்குகள் ஒதுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனால் விஜய்யின் வாரிசு படத்திற்கு ஆந்திரா, தெலுங்கானாவில் திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

