நடிகர் மறைவு
பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் தந்தையும், பழம்பெரும் நடிகருமான கிருஷ்ணா. இவர் தெலுங்கில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இறுதியாக இவர் நடிப்பில் 2016ஆம் ஆண்டு ஸ்ரீ ஸ்ரீ படம் வெளியானது. இதனிடையே 79 வயதாகும் நடிகர் கிருஷ்ணா திடீரென மாரடைப்பு ஏற்பட்டு ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சிகிச்சை பலனின்றி காலமானார்.
இரங்கல்
இந்நிலையில், நடிகர் கிருஷ்ணாவின் மறைவுக்கு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், கிருஷ்ணாவின் மறைவு திரையுலகிற்கு மாபெரும் இழப்பாகும். இந்த சோகமான நேரத்தில் எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினருடன் உள்ளன என குறிப்பிட்டுள்ளார்.

