மிதமான மழை
கடந்த மாதம் 29-ம் தேதி தமிழகம், புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இதன் காரணமாக தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேலும், கடந்த வாரம் வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் கனமழை பெய்தது. இந்நிலையில், நாளை வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் நாளை முதல் வரும்18-ம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் செந்தாமரை கண்ணன் தெரிவித்துள்ளார்.

