தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊருக்கு செல்ல விரும்புபவர்கள் இன்று முதல் முன்பதிவு செய்துகொள்ளலாம் என தெற்கு ரயில்வே அறிவுறித்தியுள்ளது.
தீபாவளி பண்டிகை
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் 24ம் தேதி கொண்டாடப்படுகிறது. சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து பொதுமக்கள், தங்கள் சொந்த ஊருக்கு சென்று தீபாவளியைக் கொண்டாடுவது வழக்கம்.
இந்நிலையில், ரயில்களில் செல்வோர் 120 நாட்களுக்கு முன்பு டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும். அதன்படி, தீபாவளிக்கு சொந்த ஊர் சொல்பவர்கள் ரயில்வே டிக்கெட் கவுன்ட்டர்கள் மற்றும் ஐஆர்சிடிசி இணைய தளம் மூலம் டிக்கெட் இன்று முதல் முன்பதிவு செய்யலாம்.
டிக்கெட் முன்பதிவு
தீபாவளி பண்டிகை திங்கள்கிழமை வருவதால், முன்னதாக அக்டோபர் 21ம் தேதியே (வெள்ளிக்கிழமை) மக்கள் சொந்த ஊர் செல்ல ஆர்வமாக இருப்பார்கள். எனவே, அக்டோர் 21ம் தேதி வெள்ளிக்கிழமைக்கான டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது
அக்டோபர் 22ஆம் தேதி பயணம் செய்ய வரும் 24ம் தேதியும், அக்டோபர் 23ம் தேதி பயணம் செய்ய வரும் 25ம் தேதியும் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தீபாவளி பண்டிகைக்கு இயக்கப்படும் ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்று தீர்ந்து விடுவது வழக்கம்.
தெற்கு ரயில்வே
இதுகுறித்து ரயில்வே அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘தீபாவளி பண்டிகைக்கு 2 நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு செல்வோரின் வசதிக்காக, டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணி தொடங்கியது’ என தெரிவித்தார். இதனால் தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊருக்குச் செல்ல விரும்புபவர்கள், ரயில் கால அட்டவணையின்படி திட்டமிட்டு முன்பதிவு செய்து கொள்ள பயணிகளை தெற்கு ரயில்வே அறிவுறுத்தியுள்ளது.