குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு குறைந்ததை தொடர்ந்து குளிக்க மாவட்ட நிர்வாகம் சார்பாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
குற்றாலம்
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தற்போது கடந்த இரண்டு வரக்கலமாக சாரல் மழை குளிர்ந்த காற்று வீசி வருகிறது. நேற்று முன்தினம் தொடர்ந்து பெய்த சாரல் மழையினால் இங்கு உள்ள மெயின் அருவி, ஐந்தருவி ஆகிய அருவிகளில் தண்ணீர்வரது அதிகரித்துள்ளது. இதில், குளிப்பது ஆபத்து என்பதால் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர். பின்னர் இரவில் வெள்ளப்பெருக்கு குறைந்ததைஅடுத்து சுற்றுலா பயணிகள் குளிக்க மாவட்ட நிர்வாகம் சார்பாக அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.

