சினிமாவெள்ளித்திரை

நெஞ்சுக்கு நீதி படத்துக்கு நடிகர் கமல்ஹாசன் பாராட்டு !

நெஞ்சுக்கு நீதி படக்குழுவினரை அழைத்து நடிகர் கமல்ஹாசன் தனது பாராட்டை தெரிவித்துள்ளார்.

நெஞ்சுக்கு நீதி

அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடித்து கடந்த மே மாதம் திரையரங்கில் வெளியான படம் நெஞ்சுக்கு நீதி. 2019ம் ஆண்டு வெளியான ‘ஆர்டிகிள் 15’ என்ற ஹிந்தி படத்தின் தழுவலாக வெளியான இத்திரைப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நெஞ்சுக்கு நீதி படத்தை பார்த்த நடிகர் கமல்ஹாசன் படக்குழுவினரை அழைத்து அவர்களுக்கு தனது பாராட்டை தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன் பாராட்டு

இதனையடுத்து கமல் நடிப்பில் சமீபத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் பெரும் வெற்றி பெற்றதற்காக உதயநிதி ஸ்டாலின், கமலுக்கு நினைவுப்பரிசு ஒன்றை வழங்கியுள்ளார். அப்போது அருண்ராஜா காமராஜ், போனி கபூர், தயாரிப்பாளர் ராகுல் ஆகியோர் உடன் இருந்தனர். மேலும், இதுகுறித்து உதயநிதி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘நெஞ்சுக்கு நீதி’ படத்தை பார்த்து குழுவினரை இன்று அழைத்து பாராட்டிய கமல்ஹாசன் சாருக்கு நன்றி. விக்ரம் படத்தில் உடன் பங்கேற்றதற்காக நினைவுப் பரிசு வழங்கினார். நாங்கள் பெரியார், அம்பேத்கர் சிலைகளை பரிசளித்து மகிழ்ந்தோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Related posts