ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அருகே விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
விவசாயி தற்கொலை
சோளிங்கரை அடுத்த கோபாலபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி துரை (54). உடல் நலப் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த அவர் மனமுடைந்து விவசாய நிலத்துக்கு சென்று, பூச்சி மருந்தை விஷம் குடித்து விட்டு மயக்கமடைந்து விவசாய நிலத்தில் விழுந்து கிடந்துள்ளார். அப்போது அவரை, அங்கிருந்த விவசாயிகள் மீட்டு வாலாஜாபாத் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி துரை பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கொண்டபாளையம் காவல்துறை துணை ஆய்வாளர் ராமமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

