சமூகம்தமிழ்நாடு

மணமகள் தேவை ! போஸ்டர் ஒட்டி வரன் தேடும் மாப்பிள்ளை !

திருமணத்திற்கு நான்கு ஆண்டுகளாக வரன் தேடியும் அமையாததால் சுவர்களில் மணமகள் தேவை என்று போஸ்டர் ஒட்டி பெண் தேடும் வாலிபர்.

மதுரையை சேர்ந்த வாலிபர்

மதுரையில் உள்ள சுவர்களில் ஒட்டப்படும் அரசியல் மற்றும் சினிமா நடிகர்களின் போஸ்டர்களை அதிகளவில் பார்த்திருப்போம். இவ்வளவு ஏன் காணவில்லை என்ற போஸ்டர்களை கூட நம் தெருக்களில் பார்த்திருப்போம். ஆனால் மதுரை வில்லாபுரம் அருகே மீனாட்சி நகரைச் சேர்ந்த 27 வயதான ஜெகன் என்ற வாலிபர் மாத வருமானமாக 40 ஆயிரம் சம்பாதிக்கிறார்.

மணமகள் தேவை போஸ்டர்

மணமகள் தேவை

மேலும், சொந்தமாக நிலமும் வைத்திருக்கிறார். இவர் திருமணத்திற்கு கடந்த நான்கு ஆண்டுகளாக வரன் தேடி வருகிறார். இருப்பினும் தனக்கு திருமணமாகாத விரக்தியில் இருந்திருக்கிறார். இதனால் அவர் மதுரை மாநகர் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சுவர்களில் மணமகள் தேவை என்று போஸ்டர் அடித்து பெண் தேடும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளார்.

90ஸ் கிட்ஸ்

இதுகுறித்து ஜெகன் கூறுகையில், ’90ஸ் கிட்ஸான நான் ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறேன். அதுமட்டுமின்றி பகுதி நேர வேலையாக பிரியாணி கடையிலும், மாமதுரை பப்ளிசிட்டி என்ற நிறுவனத்தில் போஸ்டர் ஒட்டும் பணியையும் செய்து வருகிறேன். பல பேருக்கு போஸ்டர் அடித்து ஒட்டும் நான், எனக்காக ஒரு போஸ்டர் ஒட்ட முடிவு செய்தேன். அதன்பெயரில் மணமகள் தேவை என்ற போஸ்ட்டரை ஒட்டினேன். இந்த போஸ்டரை பார்த்து பல பேர் தொலைபேசியில் அழைத்து கேலி, கிண்டல் செய்தார்கள். ஆனால் நான் அதை பெரிதளவில் கண்டுகொள்ளவில்லை.

திருமண வரன்

வாலிபரின் ஆதங்கம்

பெண் பார்க்கும் தரகர்கள் ஜாதகம் மற்றும் பணத்தை வாங்கிச் செல்வார்கள், ஆனால் ஒரு பெண்ணை கூட காண்பிக்க மாட்டார்கள். இதுதான் 90ஸ் கிட்ஸ்களின் தற்போதைய நிலை. சரி இந்த போஸ்டரை பார்த்து பெண்கள் தொடர்பு கொள்வார்கள் என்று நினைத்தால் மீண்டும் தரகர்கள் தான் தொடர்பு கொள்கிறார்கள். பெண்கள் படிப்பு, கல்வி, தகுதி ஆகியவை பார்த்து நிராகரித்து விடுகிறார்கள். தற்போது இந்த போஸ்டர் வைரலாகி வருகிறது. இதை பார்த்து பெண்கள் என்னை தொடர்பு கொள்ள வேண்டும்’ என்று ஜெகன் ஆதங்கத்துடன் கூறுகிறார்.

நூதனமுறையில் வரன் தேடும் இந்த வாலிபரின் செயல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related posts