இந்தியாமருத்துவம்

ஒரே நாளில் 2,678 பேருக்கு கொரோனா – மத்திய சுகாதாரத்துறை தகவல்!

கொரோனா பாதிப்பு

இந்தியாவில் நேற்று கொரோனா பாதிப்பு 2,786 ஆக இருந்தது. இந்நிலையில், தற்போது புதிதாக 2,678 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக இன்று காலை மத்திய சுகாதாரத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கடந்த 24 மணி நேரத்தில் 2,678 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 4 கோடியே 46 லட்சத்து 23 ஆயிரத்து 997 ஆக அதிகரித்துள்ளது. மேலும், நேற்றுவரை 4 கோடியே 40 லட்சத்து 68 ஆயிரத்து 557 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். 26,583 பேர் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

அதேபோல் கொரோனா பாதிப்பால் இந்தியாவில் இதுவரை 5,28,857 உயிரிழந்துள்ளனர்.

Related posts