சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.200 குறைந்துள்ளது.
தங்கம் விலை
கடந்த வாரம் முழுவதும் தங்கத்தின் விலையானது ஏற்ற இறக்கமாகவே இருந்தது. கடந்த 5-ம் தேதி ஒரு பவுன் தங்கத்தின் விலையானது ரூ.38,680-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து 6-ம் தேதி ரூ.38,720 ஆக அதிகரித்தது. மறுநாள் தங்கத்தின் விலை மீண்டும் சரிந்து ரூ.38,680-க்கு விற்பனையானது. அதேபோல் 8-ம் தேதி மீண்டும் ரூ.38,720 ஆக உயர்ந்தது. 10-ம் தேதி மீண்டும் பவுனுக்கு ரூ.520 ஆக குறைந்தது. இதனிடையே தங்கம் விலை நேற்று சற்று உயர்ந்து ரூ.38,080-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 ஆக குறைந்துள்ளது. ஒரு சவரன் தங்கம் ரூ.37,880-க்கு விற்பனையாகி வருகிறது. இன்று பவுனுக்கு ரூ.25 குறைந்து ரூ.4,735-க்கு விற்கப்படுகிறது.

