இந்தியாசுற்றுசூழல்

புதுச்சேரியில் சாலையில் வாகனங்களை நிறுத்த தடை!

புதுச்சேரியில் முக்கிய வணிக பகுதியான நேரு வீதியில் ஏராளமான கடைகள், வணிக நிறுவனங்கள் இயங்கி வருகிறது.

போக்குவரத்து நெரிசல்

இந்த நிறுவனங்கள் மற்றும் கடைகளின் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் உரிமையாளர்கள் அவர்களது வாகனங்களை கடைகளுக்கு முன்பு நிறுத்தி வருகிறார்கள். தற்போது தீபாவளியை யொட்டி பொதுமக்கள் கடைகளுக்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர். இதனால் மக்கள் தங்களது வாகனங்களை ஊழியர்களின் வாகனங்களின் பின்னால் அடுத்தடுத்து வாகனங்களை நிறுத்துகின்றனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

பார்க்கிங் வசதி 

இந்நிலையில், இதற்கு தீர்வு காணும் வகையில் வணிக நிறுவனங்களின் ஊழியர்கள் மற்றும் உரிமையாளர்கள் தங்களது வாகனங்களை பழைய சிறைச்சாலையில் நிறுத்திக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக பார்க்கிங் கட்டணமாக மாதம் ஒன்றுக்கு ரூ.100 வசூலிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. பொதுமக்கள் மட்டும் தங்களது வாகனங்களை கடை முன்பு தற்காலிகமாக நிறுத்திக்கொள்ளலாம்.

Related posts