சினிமாவெள்ளித்திரை

மு.க.ஸ்டாலின் உண்மையை பேசுகிறார் – ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம்!

இந்திய திரையுலகில் முன்னணி ஒளிப்பதிவாளர்களில் ஒருவராக இருப்பவர் பி.சி.ஸ்ரீராம்.

பிரபல ஒளிப்பதிவாளர்

வா இந்த பக்கம் திரைப்படத்தின் மூலம் தமிழில் பூவே பூச்சுடவா, மௌன ராகம், நாயகன், தேவர் மகன், காதல் தேசம், அலைபாயுதே போன்ற படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியதின் மூலம் பிரபலமானார். மேலும், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் பணியாற்றி இருக்கிறார். குருதிப்புனல், வானம் வசப்படும் ஆகிய படங்களில் இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். அவ்வப்போது சமூக பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்தும் வருகிறார்.

டவிட்டர் பதிவு 

இந்நிலையில், பி.சி.ஸ்ரீராம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘பொதுவெளியில் மனம் விட்டு பேசுவதற்கு வலிமையான மனம் தேவை. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைவரிடமும் உண்மையை பேசியுள்ளார். நேரடி தொடர்பும் வெளிப்படை தன்மையும் அச்சமின்மையும் இருக்கும் இன்றைய உலகில் இது அவரது வலிமையைக் காட்டுகிறது. அவர் இன்னும் உயர்ந்து நிற்கிறார்’ என குறிப்பிட்டுள்ளார்.

Related posts