சினிமாதமிழ்நாடு

ஜெயிலர் படப்பிடிப்பு தளத்தில் குவிந்த ரசிகர்கள்!

இயக்குனர் நெல்சன் திலீப்குமார் ரஜினியின் 169-வது படமான ஜெயிலர் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

படப்பிடிப்பு தளம் 

இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, கன்னட நடிகர் சிவராஜ் குமார், வசந்த் ரவி மற்றும் மலையாள நடிகர் விநாயகன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார்கள். அனிருத் இசையமைக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிலையில், ‘ஜெயிலர்’ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது கடலூர் மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு நடக்கும் பகுதியில் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.

இந்நிலையில், நடிகர் ரஜினி படப்பிடிப்பிற்காக கடலூருக்கு காரில் சென்றபோது, வழியில் ரசிகர்கள் குவிந்தனர். இதனால் தனது காரின் கண்ணாடியை இறக்கி ரசிகர்களை பார்த்து ரஜினி கையசைத்தார்.

Related posts