தமிழில் ‘ஒரு நாள் கூத்து’, ‘மான்ஸ்டர்’ படங்களை இயக்கியதின் மூலம் பிரபலமானவர் இயக்குனர் நெல்சன் வெங்கடேசன்.
ஐஸ்வர்யா ராஜேஷ்
இவர் அடுத்ததாக இயக்கியுள்ள திரைப்படம் ‘ஃபர்ஹானா’. இப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, இயக்குனர் செல்வராகவன், ஜித்தன் ரமேஷ், கிட்டி, அனுமோல், ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் வசனங்களை எழுதியுள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் திரைக்கு வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

