சமூகம்தமிழ்நாடு

தீபாவளி பண்டிகை : தமிழக அரசு ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு!

தீபாவளி பண்டிகையையொட்டி தமிழக அரசு ஊழியர்களுக்கு 10 சதவீத தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி போனஸ்

பண்டிகை நாட்களில் தமிழக அரசு சார்பில் அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் வரும் 24-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி தமிழக அரசு பொதுத்துறை நிறுவனங்களில் சி மற்றும் டி பிரிவில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 10 சதவீதம் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 8.33 சதவீதம் போனஸ் தொகை மற்றும் 1.67 சதவீதம் கருணைத்தொகை என மொத்தம் 10 சதவீதம் போனஸ் தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts