பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ்,108 அவசர ஊர்திகள் தொடர்பாக ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ட்விட்டர் பதிவு
அதில் அவர் கூறியிருப்பதாவது, ‘சென்னையில் 108 ஆம்புலன்ஸ் அழைக்கப்பட்டவுடன் புறப்படும் ஆம்புலன்ஸ், சராசரியாக 7 நிமிடத்தில் நோயாளிகளை சென்றடைகிறது. பலரின் உயிர்கள் காப்பாற்றப்படும். இது பாராட்டத்தக்கது. மேலும், நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களில் 108 ஆம்புலன்ஸ் சேவையை விரைவுபடுத்த வேண்டியது அவசியம்’ என குறிப்பிட்டுள்ளார்.
சென்னையில் 108 அவசர ஊர்திகள், அழைக்கப்பட்ட நேரத்திலிருந்து நோயாளிகளை சென்றடையும் சராசரி நேரம் 7 நிமிடமாக குறைந்துள்ளது. அதாவது, ஒருவர் சேவை கோரி அழைத்தவுடன் புறப்படும் அவசர ஊர்தி சராசரியாக அடுத்த 7 நிமிடங்களில் நோயாளியை சென்றடைகிறது. இது பாராட்டத்தக்கது!(1/4)#108Ambulance
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) October 14, 2022

