சினிமாவெள்ளித்திரை

கார்த்தி படத்தின் வீடியோ பாடல் வெளியீடு !

விருமன் படத்தின் மதுர வீரன் என்ற பாடலை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

வீடியோ பாடல்

கார்த்தி மற்றும் அதிதி ஷங்கர் இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் விருமன். இந்த படத்தை குட்டி புலி, கொம்பன், மருது ஆகிய படங்களை முத்தையா இயக்கியுள்ளார். ராஜ்கிரண், பிரகாஷ் ராஜ், சூரி ஆர்.கே. சுரேஷ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். சூர்யா – ஜோதிகா இணைந்து தயாரித்துள்ள இந்த படம் ஆகஸ்ட் 12ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், விருமன் படத்தின் ‘மதுர வீரன்’ என்ற பாடலின் கிளிம்ப்ஸ் காட்சிகளை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது தற்போது வெளியிட்டுள்ளார்.

Related posts