முதல் பாடல்
இயக்குனர் சுராஜ் இயக்கத்தில், நடிகர் வடிவேலு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’. இதில் சிவாங்கி, ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், விக்னேஷ்காந்த், லொள்ளு சபா சேஷு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. இப்படத்தின் பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படத்தின் அப்பத்தா எனும் முதல் பாடலை படக்குழு நேற்று வெளியிட்டது. இப்பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

