மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பழம்பெரும் நடிகர் கிருஷ்ணா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
பிரபல தெலுங்கு நடிகர்
பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் தந்தையும், பழம்பெரும் நடிகருமான கிருஷ்ணா. இவர் தெலுங்கில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இறுதியாக 2016ஆம் ஆண்டு வெளியான ஸ்ரீ ஸ்ரீ படத்தில் நடித்திருந்தார். 79 வயதாகும் நடிகர் கிருஷ்ணா திடீரென மாரடைப்பு ஏற்பட்டு ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவருக்கு 20 நிமிடங்கள் சிபிஆர் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், நடிகர் கிருஷ்ணா சிகிச்சை பலனின்றி காலமானார். மகேஷ் பாபுவின் தாய் கட்டமனேனி இந்திரா தேவி சமீபத்தில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.