ரீ ரிலீஸ்
இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கடந்த 2002-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘பாபா’. இப்படத்தில் ரஜினிகாந்த் கதை, திரைக்கதை எழுதி தயாரித்து, நடித்திருந்தார். இதில் மனிஷா கொய்ராலா கதாநாயகியாக நடிக்க, கவுண்டமணி, டெல்லி கணேஷ், சுஜாதா, எம்.என்.நம்பியார் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இதனிடையே இப்படம் ரீமாஸ்டர் செய்யப்பட்டு புதுப்பொலிவுடன் மீண்டும் திரையரங்கில் வெளியாகும் அறிவிக்கப்பட்டது. அந்தவகையில் அண்மையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டது.
இந்நிலையில், ‘பாபா’ திரைப்படம் வருகிற 10ம் தேதி ரீ ரிலீஸ் செய்யப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.