சர்தார் படக்குழு
இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில், நடிகர் கார்த்தி நடிப்பில் அக்டோபர் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘சர்தார்’. ஹிந்தி நடிகர் சங்கி பாண்டே ராஷிகண்ணா, ரெஜிஷா விஜயன், லைலா, யுகி சேது, முனிஷ்காந்த் உள்ளிட்டோர் முக்கிய காதபாதிரங்களில் நடித்துள்ளனர்.மேலும், ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்க, பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிதுள்ளது. இத்திரைப்படம் ரூ.100 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்பட்டது.
இந்நிலையில், ‘சர்தார்’ திரைப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் படக்குழுவினருக்கு ரூ.30,000 மதிப்புள்ள சில்வர் வாட்டர் பாட்டிலை நடிகர் கார்த்தி பரிசளித்துள்ளார்.

