டவிட்டர் பதிவு
அதிக பொருட்செலவில் கடந்த 2009-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘அவதார்’. டைட்டானிக், டெர்மினேட்டர் போன்ற பிரம்மாண்ட படங்களை இயக்கிய ஜேம்ஸ் கேமரூன் இப்படத்தை இயக்கியிருந்தார். இதன் வெற்றியை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் ‘அவதார்-2: தி வே ஆஃப் வாட்டர்’ என்ற பெயரில் இன்று உலகமெங்கும் 52 ஆயிரம் திரையரங்குகள், 160 மொழிகளில் இன்று வெளியாகியுள்ளது. இப்படம் ரிலீஸ்க்கு முன்பே முன்பதிவில் மட்டும் சுமார் ரூ10 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே பெரும் எதிர்பார்ப்பில் வெளியான ‘அவதார்-2: தி வே ஆஃப் வாட்டர்’ திரைப்படம் ரசிகர்களிடையே பிரம்மிப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘இது அவதார் தினம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

