அரசியல்தமிழ்நாடு

2023-ம் ஆண்டுக்கான முதல் சட்டசபை அடுத்த மாதம் கூடுகிறது!

சட்டமன்ற கூட்டத்தொடர்

தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் 17-ம் தேதி மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கி 3 நாட்கள் நடைபெற்றது. இதனை ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று முடித்து வைத்தார். இதனையடுத்து 2023-ம் ஆண்டுக்கான முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் அடுத்த மாதம் தொடங்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு வருடமும் முதல் சட்டமன்ற கூட்டத்தில் ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கம். அந்த வகையில் அடுத்த பொங்கலுக்கு முன்பே சட்டமன்றம் தொடங்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த கூட்டத்தில் நீட் தேர்வு விலக்கு சம்பந்தமாக மத்திய அரசை அறிவுறுத்துவது குறித்து விவாதிக்கப்படும் என தெரிகிறது.

Related posts