சினிமாவெள்ளித்திரை

பிரம்மாண்டமான லுக்கில் சிம்பு படத்தின் இசை வெளியீட்டு விழா !

இசை வெளியீட்டு விழா

எனை நோக்கி பாயும் தோட்டா படத்தை தொடர்ந்து கவுதம் மேனன் இயக்கியுள்ள திரைப்படம் வெந்து தணிந்தது காடு. சிம்பு கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் சிதி இத்னானி கதாநாயகியாக நடித்துள்ளார். ஐசரி கணேஷ் தனது வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பாக தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். சிம்பு, கவுதம் மேனன் மற்றும் ஏ.ஆர். ரகுமான் மூன்றாவது முறையாக இணையும் திரைப்படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மாதிரி மேடை

வெந்து தணிந்தது காடு படத்தில் இசை வெளியீட்டு விழா செப்டெம்பர் மாதம் 2-ம் தேதி பிரம்மாண்டமாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வெந்து தணிந்தது காடு படத்தின் இசை வெளியீட்டு விழாவின் மாதிரி மேடையை படக்குழு வெளியிட்டுள்ளது.

Related posts