ட்ரைலர் வெளியீடு
அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘நித்தம் ஒரு வானம்’. அறிமுக இயக்குனர் ஆர்.கார்த்திக் இயக்கியுள்ள இப்படத்தில் அபர்ணா பாலமுரளி, ரித்து வர்மா, சிவாத்மிகா ராஜசேகர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு கோபி சுந்தர் இசையமைக்க, வியாகோம் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அண்மையில் இப்படத்தின் பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், நடிகர் சூர்யா ‘நித்தம் ஒரு வானம்’ படத்தின் டிரைலரை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த ட்ரைலர் தற்போது இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.
Can feel all the Love that’s gone into this warm film @AshokSelvan like your selection of scripts keep going! https://t.co/oz3vJcYayh
Good Luck Team!! #NithamOruVaanam
— Suriya Sivakumar (@Suriya_offl) October 28, 2022